Load Image
dinamalar telegram
Advertisement

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி 38வது ஆண்டு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், 38வது ஆண்டு விழா நடந்தது.
கிஸ்ப்லோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லுாரி முதல்வர் பாலுசாமி, ஆண்டறிக்கை வாசித்தார்.
இறுதியாண்டு முடித்த மாணவர்களில் சிறந்தவராக பி.டி.பிஜாய் ஆண்டனி, (இயந்திர மின்னணுவியல் துறை), மாணவிகளில் சிறந்தவராக நந்திதா கல்யாணசுந்தரம் (மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை) தேர்வு செய்யப்பட்டனர். கல்லுாரி சார்பில் இருவருக்கும் ஒரு சவரன் தங்க நாணயம், ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டில் சிறந்த மாணவ-மாணவியர், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த மாணவர், துறைவாரியாக சிறந்த ஆசிரியர், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் தங்க நாணயத்துடன் ரொக்கம் வழங்கப்பட்டது.
விழாவில் கொங்கு வேளாளர் தொழில் நுட்ப கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துசாமி, செயலாளர் பழனிசாமி, பொருளாளர் கார்த்திகேயன், தாளாளர் சச்சிதானந்தன் மற்றும் அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement