Load Image
dinamalar telegram
Advertisement

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; காங்கேயம் அருகே விவசாயிகள் கைது

காங்கேயம் அருகே, உயர்மின் கோபுரம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில், விருதுநகர் முதல் காவுதம்பாளையம் வரை, உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் காங்கேயம் அருகே படியூர் கிராமம், பாப்பாங்காட்டு தோட்டத்தை சேர்ந்த, விவசாயி தங்கவேல் நிலத்தில், உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு, நில அளவீடு செய்ய, அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். தங்கவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நில அளவீடு செய்யும் பணியை நிறுத்த வேண்டும். இதுகுறித்து எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. திட்டத்தை வேறு வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம் துணை தாசில்தார் மயில்சாமி, காங்கேயம் டி.எஸ்.பி., (பொ)முத்துக்குமரன், படியூர் வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு எட்டாததால் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளை காங்கேயம் போலீசார் கைது செய்தனர். தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement