Load Image
dinamalar telegram
Advertisement

வெள்ளகோவில் கொங்கு பள்ளி பொதுத்தேர்வில் சாதனை

பிளஸ் 2 பொதுத்தேர்வில், வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அருணா, 588 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி சுருதிகா, 586 எடுத்து இரண்டாமிடம், மாணவி பவ்யாஸ்ரீ, 580 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில், மாணவி காவ்யா, 483 எடுத்து முதலிடம் பிடித்தார். மாணவி பிருந்தா, 482 எடுத்து இரண்டாமிடம், மாணவி தர்ஷினி, 478 எடுத்து மூன்றாமிடம் பிடித்தனர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ரவீந்திரன், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பழனிச்சாமி பரிசளித்து பாராட்டினர். பள்ளி மேனேஜிங் டிரஸ்டி திருநாவுக்கரசு, அறக்கட்டளை உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement