ADVERTISEMENT
ஆரோக்கியமான உணவு சலிப்பை ஏற்படுத்தாது, அதற்கான ஆதாரம் இதோ.. என தனது டயட் ரகசியத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 2009ல் திரை உலகில் அறிமுகமான இவர் தற்போது வரை அதே உடல் வாகுடன் காட்சியளிக்கிறார்., இதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக். அது மட்டுமல்ல அவர் ஆரோக்கிமான உணவையும் எடுத்து வருகிறார். அதற்கு அவர் அண்மையில் இன்ஸ்டாவில் வெளியிட்ட மினி வீடியோவே சாட்சி.
ரகுல் ஒரு உணவுப் பிரியர். நடிகைகளுக்கு பெரிய சவாலே உடல் எடையை அப்படியே வைத்திருப்பது. என்ன தான் வொர்க் அவுட் செய்தாலும், நல்ல டயட் மட்டுமே, உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க உதவும். டயட் உணவுகளில் எண்ணெயை தவிர்ப்பதால், சுவை சுமாராகவே இருக்கும் என்பது பலரது எண்ணம்..
அதற்கு நல்ல சாய்ஸாக ரகுல் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஹெல்தி பேல் ரெசிபி இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அதை செய்வதற்கு தேவையான பொருட்களின் பட்டியலையும் அவர் பகிர்ந்திருந்தார்.
1 வெங்காயம்
1 கப் தக்காளி
1 கப் துறுவிய கேரட்
1/4 கப் வேகவைத்த வேர்க்கடலை
3/4 கப் வேகவைத்த பாசிபருப்பு
1 டேபிள் ஸ்பூன் சேவ்- (அவர் சேவ் சேர்க்கவில்லை)
1 டேபிள் ஸ்பூன் க்ரீன் சட்னி (புதினா, மல்லி கொண்டு செய்யபடுவது)
2 டேபிள் ஸ்பூன் புளிச் சட்னி
2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
2 டேபிள் ஸ்பூன் - பொரி (நீங்கள் விரும்பினால்)
செய்முறை:
ஒரு பெரிய பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, துறுவிய கேரட், மற்றும், வேர்க்கடலை, பாசிபருப்பு ஆகியவற்றை கலந்து வைத்துள்ளார். பின் அதில் புளி சட்னி, க்ரீன் சட்னியை தேவையான அளவு சேர்த்துகொண்டார். சுவையான, ஆரோக்கியமான உணவை ரகுல் ருசிப்பதோடு வீடியோ முடிந்தது.
”ஆரோக்கியமான உணவு சலிப்பை ஏற்படுத்தாது, இந்த செய்முறைக்கு நான் அடிமையாகிவிட்டேன் என்பதற்கான ஆதாரம் இதோ" என்று தனது எண்ணத்தை பகிர்ந்துள்ளார். நீங்களும் செய்து பாருங்கள்.
க்ரீன் சட்னிக்கு தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி, புதினா - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்தால்… காரச் சட்னி தயார்.
புளி சட்னிக்கு தேவையான பொருட்கள்:
புளி - 50 கிராம்,
வெல்லம் - கால் கப்,
பேரீச்சம்பழம் - சிறிதளவு,
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,
வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி - வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து… மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்… புளி சட்னி ரெடி.
உங்கள் டய்ட் ரெசிபியில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!