Load Image
dinamalar telegram
Advertisement

ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ் -2 பொதுத்தேர்வில் சாதனை

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையானுார் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களும், அனைவரும் முதல்வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சரவணபிரியா, 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், இந்துஜா, 579 மதிப்பெண்ணோடு இரண்டாமிடம், அருள்மதி, 578 மதிப்பெண்ணோடு மூன்றாமிடம் பெற்றுள்ளனர். வேதியியலில் ஒருவர், உயிரியலில் இருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
‍மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி தாரணி, 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், யாழினிஸ்ரீ, 492 மதிப்பெண்ணோடு இரண்டாமிடம், ஸ்ரீதர்ஷினி, 491 மதிப்பெண்ணோடு மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். கணிதம், 3, அறிவியல், 6, சமூக அறிவியலில், 10 பேர், 100-க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களை தாளாளர் நைனான், தீரன் சின்னமலை அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலர் டாக்டர் பழனிசாமி, பொருளாளர் வேணு, துணைச்செயலர் சாமிக்கண்ணு, மேலாளர் கனி மற்றும் அறங்காவலர் குணசேகரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement