Load Image
dinamalar telegram
Advertisement

பொதுத்தேர்வில் அதியமான்கோட்டை செந்தில் பள்ளி மாணவர்கள் அபாரம்


தர்மபுரி, அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். பத்தாம் வகுப்பு மாணவி ரக்ஷனா, 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி வருண்பிரியா, 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், சங்கவி, ஹர்சிதா ஆகியோர், 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் வர்ஷினி, 592 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். ஸோபிகா, 591 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், கோகிலவாணி, 588 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடமும் பிடித்தனர். மாவட்ட, பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவியர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி, முதன்மை முதல்வர் சீனிவாசன், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதல்வர் சுந்தரம், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் கந்தபிரசாத், தீபலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement