பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதி
பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, குட்டூர் பஞ்.,ல் காரிமங்கலத்தானுாரில் உள்ள துவக்கப்பள்ளியில், 19 குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு, சத்துணவு பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், குட்டூர் துவக்கப்பள்ளியில் பணியாற்றும் சத்துணவு பொறுப்பு பணியாளர் விஜயா என்பவர், அங்கு எலும்பிச்சை சாதம் செய்து, 2 கி.மீ., தொலைவிலுள்ள காரிமங்கலத்தானுார் பள்ளிக்கு எடுத்துச் சென்று, குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட நான்கு குழந்தைகளுக்கு வயிற்று வலி, அஜீரண கோளாறு, பேதியானது.
இதுகுறித்து, பர்கூர் பி.டி.ஓ., சுப்பிரமணியை மொபைல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''ஒரு குழந்தைக்கு மட்டும் பேதி ஆனது, மற்றவர்கள் நலமாக உள்ளனர். அங்கு சத்துணவு பணியாளர் இல்லாததால், வேறு இடத்திலிருந்து உணவு எடுத்து வரப்பட்டது. நாளை(இன்று) முதல் அப்பள்ளியிலேயே சமையல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!