மாணவியை ஒப்படைக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்
அரூர் பகுதியை சேர்ந்த, 18 வயது மாணவி, சேலம் அரசு கல்லுாரியில், பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 20ல் காலை, 7:00 மணிக்கு வெளியில் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. மாணவியின் தந்தை புகார்படி, அரூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மாணவியை அதே பகுதியை சேர்ந்த, திருமண வயது பூர்த்தியடையாத ஆண் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவியை மீட்டு தங்களிடம் ஒப்படைக்கக்கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரூர் போலீஸ் ஸ்டேஷன் முன், நேற்று மதியம், 3:35 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில், 3:50 மணிக்கு மறியலை கைவிட்டனர். தொடர்ந்து, டி.எஸ்.பி., பெனாசிர் பாத்திமாவிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!