Load Image
dinamalar telegram
Advertisement

ரூ.2.79 கோடி கடனுக்கு ரூ.13 கோடி கேட்டு மிரட்டல்; பெங்களூரு ஆசாமி மீது கந்து வட்டி வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சிப்காட் ஸ்டெப் ஹவுசிங் காலனியை சேர்ந்தவர் யுவராஜ், 38; சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். கடந்த, 2018 ஜூலை, 18ல் கர்நாடக மாநிலம், பெங்களூரு, அத்திப்பள்ளியை சேர்ந்த சிவப்பாரெட்டியிடம், 2 கோடியே, 79 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். இதற்காக புரோநோட், வங்கி காசோலை தந்தார். கடந்த, 2020 பிப்., வரை, ஏழு கோடியே, 85 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கொடுத்த புரோ நோட் மற்றும் காசோலைகளை திரும்ப கேட்டார். தர மறுத்த சிவப்பாரெட்டி, மேலும் ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து யுவராஜ் புகார்படி ஓசூர் சிப்காட் போலீசார், சிவப்பாரெட்டி மீது, கந்து வட்டி பிரிவில் வழக்கு பதிந்துள்ளனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி, வெங்கடாபுரம் அதியமான் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 55; இவர் கிருஷ்ணகியை சேர்ந்த ரகு என்பவரிடம், 18 ஆயிரம் ரூபாய் கடந்த பிப்.,2ல் கடன் வாங்கியுள்ளார். மாதம், 2,000 ரூபாய் வட்டி கட்டி வந்தார். மூன்று மாதம் கழித்து மீண்டும், 20 ஆயிரம் வாங்கியுள்ளார். இதற்கு கூடுதல் வட்டி தருமாறு ரகு கேட்டுள்ளார். ஜெயச்சந்திரன் புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ரகு மீது கந்துவட்டி பிரிவில் வழக்குப்பதிந்தனர்.
* போச்சம்பள்ளி, கோடிபதியை சேர்ந்த கூலி தொழிலாளி அம்பிகா, 50; அதே பகுதியை சேர்ந்த இளவரசன், 38, சித்ரா, 32, தம்பதியிடம், 2018 மே மாதம், 1.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதுவரை அம்பிகா ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டிய நிலையில், வட்டியும் அசலுமாக, 5.25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். அம்பிகா புகார்படி இளவரசன், சித்ரா மீது, மத்துார் போலீசார், கந்துவட்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்பது கந்து வட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement