ஊழியரை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார்
பாகலுார் அடுத்த தேவீரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றுபவர் பொன்னம்பலம், 59; தலைமை ஆசிரியர் அன்னையப்பா, 57; அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து சமீபத்தில் இறந்த சேஷாத்திரி என்ற ஆசிரியருக்கு பென்ஷன் தொகை கேட்டு, அவரது மனைவி குமுதா கடந்த, 15ல் மனு அளித்துள்ளார்.
அதை, பள்ளி இளநிலை உதவியாளர் பொன்னம்பலம் சரிபார்த்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். அவர் முன்மொழிவுக்கு அனுப்பாமல், நேற்று முன்தினம் வரை காலம் தாமதித்துள்ளார். மேலும் விண்ணப்பத்தில், 22ம் தேதி என குறிப்பிட்டு மனுவை அனுப்ப கூறியுள்ளார். இதற்கு பொன்னம்பலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைமை ஆசிரியர் அன்னையப்பா, தன்னை பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து காயப்படுத்தியதாக, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரியிடம், பொன்னம்பலம் நேற்று புகார் அளித்துள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!