வேலூருக்கு வேனில் கடத்திய ரூ.2.89 லட்சம் குட்கா பறிமுதல்
வேனில் கடத்த முயன்ற, 2.89 லட்சம் ரூபாய் மதிப்பு, குட்கா பொருள், கிருஷ்ணகிரி அருகே சிக்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போலீசார், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புலியரசிமேடு அருகே ஒரு பொலிரோ பிக்கப் வேனில், 450 கிலோ எடையில், குட்கா பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு, 2.௮௯ லட்சம் ரூபாய் ஆகும். வேனை ஓட்டி வந்த துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரை அடுத்த அம்பைகுளம் குணசேகர், 36, என்பவரிடம் விசாரித்தனர். பெங்களூருவில் வாங்கி வேலுாருக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!