Load Image
dinamalar telegram
Advertisement

மாங்கனி கண்காட்சியில் மக்களை கவர்ந்த மெகா சைஸ் மஞ்சப்பை

கிருணகிரி மாங்கனி கண்காட்சியில் வைத்துள்ள மெகா சைஸ், 'மஞ்சப்பை' பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடந்தாண்டு டிச., 23ல் தமிழக முதல்வர், 'மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால், கடந்த ஆறு மாதங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு, 20 சதவீதம் குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி நகர்மன்றத்தலைவர் பரிதா நவாப், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள், காய்கறிக் கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, அதற்கு மாற்றாக, 'மஞ்சப்பை'யை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது.
இதன் நுழைவாயிலில், நகராட்சி சார்பில் மெகா சைஸ், 'மஞ்சப்பை' வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, 46 அடி உயரம், 20 அடி அகலம், 1,050 மீட்டர் துணியால் தயாரித்து, காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மாங்கனி கண்காட்சிக்கு வரும் மக்கள், இந்த மெகா சைஸ், 'மஞ்சப்பை'யை வியப்புடன் பார்த்து, தங்கள் மொபைலில், 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இக்கண்காட்சியில், பொதுமக்களை கவரும் வகையில் வைத்துள்ள இந்த மெகா சைஸ், 'மஞ்சப்பை' அனைவரையும் கவர்ந்துள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement