Load Image
dinamalar telegram
Advertisement

பெண்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை அடுத்த, நொச்சிப்பட்டியில், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை கண்டித்தும், முறையான வேலை வழங்கக்கோரியும் நேற்று, அப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்‍போது, ஏரிப்பணியில் போலி கார்டுகள் தயாரித்து, ஊரில் இல்லாதவர் பெயரில் வேலைக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிந்து முறைகேடு செய்யும் நொச்சிப்பட்டி பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, நொச்சிப்பட்டி -- கல்லாவி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலின்படி வந்த ஊத்தங்கரை பி.டி.ஓ., மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் பெண்கள் கலைந்து சென்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement