Load Image
dinamalar telegram
Advertisement

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல்

தர்மபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம் கடத்துார் பஞ்.,ல் 8 வார்டு உறுப்பினர் பதவியிடம், கொண்டகாரஹள்ளி பஞ்., 7வது வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உட்பட மாவட்டத்தில் மொத்தம், 11 பஞ்., வார்டுகள் உறுப்பினர்கள் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இதேபோன்று, பாலக்கோடு யூனியனுக்கு உட்பட்ட, குட்லானஹள்ளி பஞ்., தலைவர் பதவியிடம் மற்றும் காரிமங்கலம் யூனியன், 19வது வார்டு யூனியன் கவுன்சிலர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த, 20ல் துவங்கியது. வரும், 27ல் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும்.
இடைத்தேர்தலில் ஆளும், தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வினர், மாவட்டத்தில் தங்களது பலத்தை காட்ட, போட்டியின்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் வேட்பாளர்களை, வேட்புமனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால் கடந்த, மூன்று நாட்களாக ஒரு சிலர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement