நேற்று (ஜூன் 23) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இப்பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டார். இதற்கிடையே ஓபிஎஸ்.,சை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்தனர்.

இந்த நிலையில் டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டியதற்கு எதிராக அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ‛கட்சி விதியில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக பொதுச்செயலர் பதவியை கொண்டு முயற்சிப்பதாகவும், தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது என அறிவிக்க வலியுறுத்தியும் அவர் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், இதுவரை தேர்தல் ஆணையத்தை நாடவில்லை எனக்கூறியுள்ளார்.
பழனிசாமி வீட்டில் ஆலோசனை
டில்லியில் ஓபிஎஸ் தரப்பு முகாமிட்டுள்ள நிலையில், ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு குறித்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து (16)
பன்னீர்செல்வத்தால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இவருக்கு கட்சியில் இப்படி குழப்பம் செய்வதே பிழைப்பாகி விட்டது... இந்தாளு நினைப்பது இனி நடக்கவே நடக்காது...
பல தவறுகள் செய்து உள்ளார் பன்னீர்செல்வம்.அதிமுகவில் அவரால் இனி பிழைக்க முடியாது.. அவர் மகனுக்கும் அது அவ்வளவு தான்.
ஜெயலலிதாவாரம்கட்டப்பட்டவர்கள் இடப்படிஅண்டஜய்குமார். முனுசாமிக்குஎன்னாச்சு. பண்ணீரைவைத்து முக்கியபதவியை பேற்றுகோஷ்டி மாறினார்.மபபாண்டியன்மந்திரியானதற்கு யார்காரணம்யார் in that Shanmugam..Palanisamy அண்ட் காயர்ருக்கு vottupodapoduvargal
அங்கே சிவ சேனா தள்ளாடுகிறது . இங்கே அண்ணா திமுக சுருண்டு கிடக்கிறது தமிழ் நாட்டில் , பா.ஜ.க. மகிழ்ச்சி அடைவதை விட , அதிக அளவிலான சோகத்தில் தி.மு.க. தான் மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இரட்டைத்தலைமையை சமாளித்த மாதிரி , இரட்டைக்குழல் துப்பாக்கியான அண்ணாமலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது . மேற்கு வங்கத்தில் மம்தா கூட்டத்தையும் அடக்கி விட்டால் , ஸ்வச் பாரத் முழுமை அடைந்து விடும் நல்லது நடக்கட்டும்
கட்சியில் ரெட்டை தலைமையை ஏற்று சமீபத்தில் தான் தொண்டர்கள் வாக்களித்தனர். உட்கட்சி தேர்தலும் பல பதவிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி மாவட்ட வாரியாக நடந்தது. தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக சொல்லப்படுவது .நம்பக்கூடியதாக இல்லை. பன்னீர்செல்வம் ஆளுமை உள்ளவரா இல்லையா என்ற விவாதம் தேவையற்றது. அவர் செயல்படவில்லை என்று ஒட்டுமொத்தமாக குறைசொல்வது சரியல்ல. எடப்பாடியார் முதல்வராக இருந்ததாலேயே அவருக்கு பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியான தி.மு.கவை எதிர்த்து புள்ளிவிவரத்தோடு பேச முடிந்தது. மேலும் அவரை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் நடந்ததால் அவர் நிறைய பேச முடிந்தது. கட்சி ஜெயிக்க பேசித்தான் ஆக வேண்டும். அப்படி பேசியதால் அவருக்கு திறமை அதிகம் என்று வெளியில் சொல்லப்பட்டது.. இதுவே பன்னீர் முதல்வராக இருந்திருந்தால் இதுதான் அவர்தான் நிறைய பேசி இருந்திருப்பார்.எனவே பன்னீரை ஆளுமை அற்றவர் என்று எண்ணுவது சரியல்ல. யார் முதல்வரோ அவருக்கு பின்னால் எல்லோரும் அணிவகுப்பார்கள். எனவே அவருக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருக்கிறது என்பது .இயல்பான ஒன்று. பன்னீரும் முதல்வராக இருந்திருந்தால் அவர் பின்னாலும் மாவட்ட செயலர் அனைவரும் இருப்பர். கட்சிக்காக அனைத்து மாவட்டங்களும் வட்டங்களும் உழைத்திருந்தார்கள் என்றால் கட்சி ஜெயித்திருக்கும். ரெட்டை தலைமையை சாக்காக சொல்லி அவர்கள் . ஒழுங்காக வேலை செய்யவில்லை. ஒரு கம்பெனியில் போர்டு லெவலில் பிரச்சினை என்பது எப்போதும் இருக்கும். அதை சாக்காக வைத்து ஊழியர்கள் வேலை செய்யாமல் இருப்பார்களா ? ரெட்டை தலைமையோ ஒற்றை தலைமையோ கட்சியில் நிர்வாகிகள் நம்பிக்கையோடு வேலை செய்யவில்லை. பன்னீர் பொருளாளர் . பணத்தை எதிர்பார்த்தார்கள்.பணம் வரவில்லை என்றதும் வேலை செய்யவில்லை. தேர்தலில் தோற்றார்கள்.இதற்கும் ரெட்டை தலைமைக்கும் .முடிச்சு போட்டுவிட்டனர். தொண்டர்கள் மீது பழியை போட்டு ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் சொல்வதாக நாடகம் நடக்கிறது. இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து நிற்பதால் யதார்த்தத்தை தொண்டர்களுக்கு எடுத்து சொல்ல யாருக்கும் துணிவில்லை.