ரயிலில் தர்மபுரி வந்த 1,228 டன் யூரியா
தர்மபுரிக்கு சரக்கு ரயிலில், 1,228 டன் யூரியா வந்துள்ளது, என, வேளாண் துறை இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மணலியிலிருந்து, தர்மபுரிக்கு ரயில் மூலம், 1,228 டன் யூரியா வந்துள்ளது. இதை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, தர்மபுரி வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களிலுள்ள தனியார் உர விற்பனை கடைகளுக்கு, லாரிகள் மூலம் பிரித்தனுப்பும் பணியை ஆய்வு செய்தார். இதில், தர்மபுரி மாவட்ட உரக்கடைகளுக்கு, 361 டன் யூரியா, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, 426 டன் மற்றும் சேலம் மாவட்டத்துக்கு, 441 டன் யூரியா பிரித்தனுப்பப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில், 7,550 டன் உரம் இருப்பு உள்ளது. விவசாயிகள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, அரசு நிர்ணயித்த விலையில் யூரியா வாங்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!