Load Image
dinamalar telegram
Advertisement

பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவக்கம்

Tamil News
ADVERTISEMENT

ஆசிய பங்குச்சந்தைகளின் உயர்வு தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தைகளும் இன்று உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 500 புள்ளிகள், நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தமாகி வருகிறது.

இன்றைய (ஜூன் 24) வர்த்தக நேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வுடனும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி குறியீட்டெண் 15,700 புள்ளிகளுக்கு மேல் துவங்கியது. வங்கி, ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் 1 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.Latest Tamil News ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஃபியூச்சர், பிரிட்டானியா உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவன பங்குகள் 2 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டன. டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட உலோக நிறுவன பங்குகள் மதிப்பு 1 சதவீதம் உயர்வை கண்டன. அனைத்து நிறுவன பங்குகளும் சற்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

ரூபாய் மதிப்பு உயர்வு :



அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை நீடிக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை பெரிய மாற்றமின்றி நீடிக்கிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து, 78.22 ஆக அதிகரித்தது.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement