ADVERTISEMENT
சாம்சங் நிறுவனத்தின் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் அடுத்த வெளியீடாக வந்துள்ளது கேலக்ஸி எப் 13. ஜூன் 22 ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் Exynos 850 பிராசசரில் இயங்குகிறது. 6.6 இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 6000mAh பேட்டரியுடன் கிடைக்கும் இந்த ஸ்மார்போன் 15W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

கேமராவை பொருத்தவரை, 3 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 50 மெகா பிக்சல் கொண்ட பிரதான கேமரா, 50 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமரா ஆகியவை உள்ளன. மேலும் 8 மெகா பிக்சல் செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்டர் பால் ப்ளூ, சன்ரைஸ் காப்பர் மற்றும் நைட்ஸ்கை கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 29-ல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான பிளிப்கார்ட் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் கிடைக்கும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி இன்பில்ட் மெமரி கொண்ட கேலக்ஸி எப்13 ரூ.11,999-க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்பில்ட் மெமரி கொண்ட கேலக்ஸி எப்13 ரூ.12,999-க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!