ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் புதிதாக பரவி வரும் கோவிட் பாதிப்பு என்பது பிற மாநிலங்களில் பரவுவதை விட மிக குறைவுதான் என தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பிஏ-4, பிஏ-5 உருமாறிய தொற்று வேகமாக பரவும் நிலையில் உள்ளது. ஆனால் உயிர் பாதுகாப்புக்கு கவலையில்லை. மஹாராஷ்டிரா, கேரளா, டில்லியில் இரட்டிப்பாக பரவி வருகிறது. தமிழகத்தில் அந்த நிலை இல்லை. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னையில் 6 % வரை கோவிட் பாதிப்பு உயர்ந்து வருகிறது. கோவிட் கேர் சென்டர்கள் அதிகரித்து வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் போதிய ஏற்பாடு செய்து வருகிறோம். பாதிப்பு இருக்கும் பகுதிகளில் ஆய்வு செய்து கட்டுப்படுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முழு கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்படித்தானே உருட்டி ஆகணும்.