அந்தரத்தில் பாலம்: இழப்பீடு விவகாரத்தால் 12 ஆண்டாக நீடிக்கும் சிக்கல்
திருப்பூர்: திருப்பூர், மண்ணரை பகுதியில் ரயில்வே உயர் மட்டப் பாலம் கட்டும் பணிக்கு நிலம் அளவீடு செய்யும் பணியை நில உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூரில், ரயில்வே பாதை, நொய்யல் ஆறு ஆகியன நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இவற்றைக் கடந்து செல்லும் வகையில் பாலங்கள் அவசியமாக உள்ளன. நகரப் பகுதிக்குள் உள்ள ரயில்வே மேம்பாலத்துக்கு அடுத்தபடியாக வஞ்சிபாளையம், ஊத்துக்குளி ஆகிய பகுதி களில் மட்டுமே ரயில் பாதையைக் கடக்கும் வகையில் பாலங்கள் உள்ளன. டி.எம்.எப்., அருகே ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது.அணைப்பாளையம், மண்ணரை (கேட் தோட்டம்) மற்றும் ஊத்துக்குளி ரோடு (எஸ்.ஆர்.சி., மில்) ஆகிய இடங்களில் ரயில்வே உயர் மட்டப் பாலம் கட்டும் பணி துவங்கி நிறைவடையாமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.தற்போது இப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு பாலம் கட்டுமானப் பணியை முடிக்கும் வகையில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.மண்ணரை கேட் தோட்டம் பகுதியில் ரயில்வே பாதை மீது மட்டுமே பாலம் கட்டி அந்தரத்தில் நின்று கொண்டுள்ளது.

நேற்று காலை பாலம் கட்டுமானப் பணி மேற்கொள்ளவுள்ள பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணிக்கு வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறையினர் சென்றனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட நில உரிமையாளர்கள், உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை அளவீடு செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அவர்களைத் தடுத்தனர்.போலீசார், வருவாய் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். நேற்று காலை முதல் மாலை வரை அங்கு பரபரப்பு நிலவியது.நில உரிமையாளர்கள் கூறுகையில், ''கடந்த 12 ஆண்டாக இப்பிரச்னை உள்ளது. ஏறத்தாழ 50 குடும்பங்களுக்கு பாத்தியப்பட்ட 3.5 ஏக்கர் நிலம் பாலம் பணிக்கு எடுக்கப்படுகிறது.
அப்போது இழப்பீடாக சென்ட்டுக்கு 1.40 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாகத் தெரிவித்தனர். தற்போது 27 ஆயிரம் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை பல விதமாக நிர்ணயித்துள்ளனர். மேலும், இந்த தொகை கோர்ட்டில் டிபாசிட் செய்யப்பட்டு விட்டது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அதைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.நாங்கள் சந்தை மதிப்பு அடிப்படையில் கூட கேட்காமல் முன்னர் உறுதியளித்த தொகையைத் தான் கேட்கிறோம்'' என்றனர்.
வருவாய் துறையினர் கூறுகையில், ''ஏறத்தாழ 12 ஆண்டுக்கு மேலாகி விட்ட நிலையில்,இத்திட்டம் அத்தியாவசிய வளர்ச்சி என்ற அடிப்படையில், அரசு திட்டத்துக்கு கையகப்படுத்தும் வகையில் மாறி விட்டது. இதற்கு அரசு நிர்ணயித்த தொகை, வருவாய் துறை சார்பில் கோர்ட்டில் டிபாசிட் செய்யப்பட்டு விட்டது.நிலத்தை அளவீடு செய்து கட்டுமானப் பணிக்கு நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் தங்கள் ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து உரிய இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்'' என்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!