வாஸ்தவம் தான்... சமூக நீதி பற்றி வாய் கிழிய பேசும் நம்ம ஊர் தலைவர்கள் என்ன முடிவெடுக்கின்றனர் என பார்க்க தானே போகிறோம்!
ராகுல் மட்டுமில்ல... ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன... காக்கை உட்கார பனம்பழம் விழுந்தால் கூட, ராகுல் கணக்குல சேர்த்துடுவீங்களோ?
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: ஒருபக்கம் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வறுமையில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். ஆனால், மறுபக்கம் பிரதமர் மோடி ஆட்சியில், அதானி, அம்பானிகள் போன்ற குறிப்பிட்ட சில முதலாளிகளின் சொத்து மதிப்பு பலமடங்கு கூடியுள்ளது. மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை; அதானி, அம்பானிகள் தான் வளர்ந்துள்ளனர்.
மத்தியில காங்கிரஸ் ஆட்சி நடந்தப்ப தான், திருபாய் அம்பானி அபாரமாக வளர்ந்தார் என்பதை மறந்துட்டீங்களா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ரிஷிவந்தியம் தாலுகா அமைக்கப்படும்' என, ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். மாறாக, 'வானாபுரம் புதிய தாலுகா அமைக்கப்படும்' என, சட்டசபையில் வருவாய்த் துறை அமைச்சர் அறிவித்தார். தாலுகா அலுவலகத்திற்கு, 50 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது என்பதற்காகவே, அப்பகுதி மக்கள் புதிய தாலுகா கோரினர். ஆனால், '50 கி.மீ.,க்கு பதிலாக, 60 கி.மீ., செல்லுங்கள்' என, மக்களை அலைய விடுவது எந்த வகையில் நியாயம்?
வானாபுரம் பக்கத்துல ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு வேண்டிய காலியிடங்கள் நிறைய இருக்கலாம்... அதன் மதிப்பு உயர வேண்டாமா?
I don't.understand how come there is no comments from Ms.Malala and the Great Greta Dhunburg? Wonde. They really don't care to comment on good things about India asCountry towards woman. Very unfortunate to see these women have ive vision and hearing capabilities