ஸ்மார்ட் சிட்டி வேலையை முடிக்க கெடு: மாநகராட்சிக்கு எச்சரிக்கை
கோவை: 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை, 2023 மார்ச் 31க்குள் முடிக்காவிட்டால் ஒதுக்கிய நிதி, மத்திய அரசுக்கு திரும்பிச் சென்று விடும் என சுற்றறிக்கை வந்திருப்பதால், கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களை செயல்படுத்த, கோவையை, 2015ல் மத்திய அரசு தேர்வு செய்து, பங்களிப்பு தொகையாக, ரூ.490 கோடி வழங்கியது; மாநில அரசு பங்களிப்பாக ரூ.500 கோடி கொடுத்தது.இதில், 978.73 கோடி ரூபாய்க்கு, 56 பணிகள திட்டமிடப்பட்டன. ரூ.24.05 கோடியில், 32 பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை, ரூ.719.22 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. ரூ.16.74 கோடிக்கு, 10 புதிய பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.இருப்பினும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் வேகம் குறைந்தது.
ஒவ்வொரு இடத்திலும் சொற்ப ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர்.ஆர்.எஸ்.புரத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, பொறியியல் பிரிவினர் போதிய அக்கறை காட்டாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
இதைத்தொடந்து, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், டில்லி சென்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியை நேரில் சந்தித்தார்.அப்போது, 'கோவைக்கு வருகை தந்து 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.

இச்சூழலில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, பணிகள் தொய்வாக இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
பின், 2023 மார்ச், 31க்குள் வேலைகளை முடிக்காவிட்டால், ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் சென்று விடும் என, மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்திருக்கிறது. அதற்குள் வேலையை முடிக்க வேண்டும். இல்லையெனில், இப்போது துவக்கியுள்ள பணிகளை மாநகராட்சி நிதியில் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.அதனால், 'ஸ்மார்ட் சிட்டி' வேலைகளை வேகப்படுத்த, பொறியியல் பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் அறிவுறுத்தியிருக்கிறார்.

வாசகர் கருத்து (2)
அரசியல் லாபம் பார்க்கும் திமுகவினர்.மத்தியரசின் நீதியை திரும்பி செல்ல முயற்சிக்கிறார்கள்
கொஞ்சம் இருங்க ...