கிளிகளை விழுங்கிய பச்சை பாம்புகள்
திருப்பூர் : காங்கயத்தில், கூண்டில் நுழைந்த பச்சைப்பாம்புகள், கிளிகளை விழுங்கின.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், உடையார் காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். வீட்டில் இரு கூண்டுகளில் நான்கு ஜோடி கிளிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கிளிகள் வழக்கத்துக்கு மாறாக கீச்சிடும் சப்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது, ஐந்து அடி நீளமுள்ள, இரண்டு பச்சைப்பாம்புகள் படுத்துக் கிடந்தன. கூண்டுக்குள் இருந்த இரு பாம்புகளும் தலா இரு கிளிகளை இரையாக்கியது தெரியவந்தது. தகவலறிந்த, காங்கயம் தீயணைப்பு துறையினர், இரு பாம்புகளையும் ஊதியூர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!