Load Image
dinamalar telegram
Advertisement

மாணவர்களுக்கு சிகை அலங்காரம்பள்ளி தலைமையாசிரியர் அதிரடி



கண்டமங்கலம் : அரசு பள்ளி மாணவர்களுக்கு தலைமையாசிரியர் முடிவெட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைராலாகி வருகிறது.


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சமீபத்தில் பொறுப்பேற்ற ஜேவியர் சந்திரக்குமார், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.பொதுத் தேர்வுகள் துவங்குவதற்கு முன், தாறுமாறான சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, தலைமையாசிரியர் ஜேவியர் சந்திரக்குமார் கத்தரிக்கோலுடன் தானே சிகை அலங்காரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேர்வுகள் முடிந்து பள்ளிகள் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், மாணவர்கள் சிலர் வழக்கம்போல் தாறுமாறான சிகை அலங்காரத்துடன் வந்தனர்.இதையடுத்து, தலைமையாசிரியர் நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து சம்மர் கட் வெட்டி விட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement