மருத்துவமனை சூறையாடல் கூலிப்படையினர் 5 பேர் கைது
கோவை : கோவை தனியார் மருத்துவமனையை சூறையாடியது தொடர்பாக, மேலும் ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை எல்லன் மருத்துவமனையை, சென்னையைச் சேர்ந்த டாக்டர் உமாசங்கர் ஒப்பந்த அடிப்படையில் வாங்கி, சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றி நடத்தி வந்தார்.இந்த மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரனுக்கும், டாக்டர் உமா சங்கருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், 2020 டிச., 4ல் மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல், நோயாளிகள், பணியாளர்களை அடித்து விரட்டியது; பொருட்களை சூறையாடியது.சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், டாக்டர் உமாசங்கர், மேலாளர் மருதவாணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வந்த உமாசங்கர் விபத்தில் இறந்தார்.
கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரித்த சி.பி.சிஐ.டி., போலீசார், குண்டர்களை அனுப்பி மருத்துவமனையை தாக்கியது டாக்டர் ராமச்சந்திரன் என்று கண்டறிந்தனர்.கடந்த 10 நாட்களுக்கு முன், ராமச்சந்திரன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் கூலிப்படையாக செயல்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த பழனிசாமி, 40, சிவானந்தா காலனியை சேர்ந்த ஜெய்ஹர், 40, புருஷோத்தமன், 45, காந்திபுரம் வின்சென்ட் சஞ்சய், 39, வெள்ளலூர் சுரேஷ்பாபு, 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிறையில் அடைக்க, கோவை முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!