கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவு
புதுடில்லி : கொரோனா தொற்று புதிதாக உருமாற்றம் அடைகிறதா என்பதை கண்டறியும் முழு மரபணு வரிசைமுறை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பிறப்பித்த உத்தரவு:
பல்வேறு மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, தொற்று அதிகரிக்கும் மாவட்டங்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். அங்கு வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதை கண்டறிய முழு மரபணு வரிசைமுறை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதிக தொற்று பதிவாகும் மாவட்டங்களில் தடுப்பூசி மற்றும், 'பூஸ்டர் டோஸ்' போடுவதை வேகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!