கூட்டுறவு கூடுதல் பதிவாளர்கள் மாற்றம்
சென்னை : மாநில வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் கூடுதல் பதிவாளர் உட்பட, மூன்று கூடுதல் பதிவாளர்களை இடமாற்றம் செய்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளார். அவருக்கு கீழ் கூடுதல் பதிவாளர்கள், இணை பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் ஆகியவை முக்கியத்தும் வாய்ந்த பதவிகள்.மாநில வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண் இயக்குனராக இருந்த கூடுதல் பதிவாளர் பிருந்தா, பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு வளர்ச்சி திட்ட கூடுதல் பதிவாளராக இருந்த பாலமுருகன், நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கும்; தொழில், கூட்டுறவு, கயிறு பிரிவு கூடுதல் பதிவாளர் சுப்ரமணியன், பதிவாளர் அலுவலகத்தில் உள்ள விற்பனை திட்டம் வளர்ச்சி பிரிவுக்கும் இடமாற்றப்பட்டு உள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!