Load Image
Advertisement

இளம்பெண் பாலியல் கொடுமை: போலீஸ் நடவடிக்கை என்ன? மன நல சீராய்வு மன்றம் கிடுக்கிப்பிடி

கோவை : கோவை அருகே, மாற்றுத்திறனாளியான இளம்பெண் சீரழிக்கப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மன நல சீராய்வு மன்றம், போலீஸ் அதிகாரிகளிடம், 'கிடுக்கிப்பிடி' கேள்வி எழுப்பியுள்ளது.


கோவை மாவட்டம், பேரூர் அருகே, பச்சாபாளையம்- தீத்திபாளையம் செல்லும் ரோட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட 29 வயது மாற்றுத்திறனாளி பெண், பாழடைந்த கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவருடன், அவரது தந்தையும் தங்கியிருந்தார்.சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பெண், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், சில மாதம் முன் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.போலீசாரின் அசட்டையான செயல்பாடு பற்றி, 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் சமீரன் உத்தரவின்படி, அந்த இடம் சென்ற போலீஸ் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், அந்த பெண்ணை மீட்டனர்.

இளம்பெண் மற்றும் அவரது தந்தையை, அன்னுார் அருகே பதுவம்பள்ளியில் இருக்கும் காப்பகத்தில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், கோவை மனநல சீராய்வு மன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மன நல சீராய்வு மன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ராஜ் தலைமையில் உறுப்பினர்கள் பூர்ணஜித், வசந்த ராம்குமார் ஆகியோர் ஆலோசித்தனர்.

அறிக்கை தர உத்தரவு

முடிவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருமாறு:நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம், மிகவும் கொடூரமான குற்றம் என இந்த மன்றம் கருதுகிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கு உடனடி போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில், மன நல பாதுகாப்பு சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளில், கடும் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது.எனவே, விதிவிலக்கான இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கோவை மன நல சீராய்வு மன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

 கோவை ரூரல் எஸ்.பி., பேரூர் டி.எஸ்.பி., பேரூர் இன்ஸ்பெக்டர் ஆகியோர், பாதிப்புக்கு ஆளானவரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்ட விதிகளின்படியும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக மன நல சீராய்வு மன்றத்துக்கு எந்த தாமதமும் இன்றி அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.

 மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்பது, பாதுகாப்பது, சிகிச்சை அளிப்பது, மறு வாழ்வு அளிப்பது தொடர்பாக மன நல பாதுகாப்பு சட்டம் - 2017ன்படி, மன நல சீராய்வு மன்றத்தை அணுகி, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது பற்றி அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.


இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement