Load Image
dinamalar telegram
Advertisement

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை : புதிய பாடப்பிரிவுக்கு மாணவர்களிடம் வரவேற்பு

கோவை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக துவங்கப்பட்டுள்ள படிப்புக்கு மாணவர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இன்ஜி., மருத்துவ படிப்புகளுக்கு இணையாக இன்று பாலிடெக்னிக் படிப்புகளுக்கும் மாணவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது போல் பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 2022-23 கல்வியாண்டுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், http://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூலை, 8ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இயலாதவர்கள், மாவட்ட சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிவில், மெக்கானிக்கல், புரடெக் ஷன், இ.இ.இ., - இ.சி.இ., கம்ப்யூட்டர், உள்ளிட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில் வழக்கமான இப்படிப்புகளுடன் இந்தாண்டு முதல், இ.சி.ஜி., டெக்னாலஜி எனும், டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் கூறுகையில், 'பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். இன்று மருத்துவமனைகளில், இ.சி.ஜி., தொழில்நுட்ப மாணவர்களுக்கு அதிக தேவை உள்ளது.எனவே, இப்படிப்புக்கு மாணவர்களிடம் வரவேற்பு உள்ளது. மேலும், இப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது' என்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement