ஓய்வு ஊழியர் வீட்டில் 40 பவுன் கொள்ளை
திருமங்கலம் : மதுரைமாவட்டம் திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் சுந்தரம் 61, வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருமங்கலம் ஓய்வுபெற்ற சி.பி.ஐ., நீதிமன்ற ஊழியர் சுந்தரம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர் சேடப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்கிறார்.நேற்று முன்தினம் காலை தமிழ்ச்செல்வி வேலைக்கு சென்று விட்டார். சுந்தரமும் நேற்று முன்தினமே குதிரை சாரி குளத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டார்.ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 40 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். மற்றொரு பீரோவில் இருந்த நகை, பணம் அப்படியே இருந்தது. டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!