Load Image
dinamalar telegram
Advertisement

கூட்டுறவு வங்கி மேலாளர் குளத்தில் குதித்து தற்கொலை



திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதை குளத்தில் குதித்து, கூட்டுறவு வங்கி மேலாளர், தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை, மேற்கு கோபுர தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 50; திருவண்ணாமலை நகர கூட்டுறவு வங்கி மேலாளர். இவர் மனைவி புனிதா. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டை விட்டு சத்தியமூர்த்தி வெளியேறினார்.கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை குளத்தின் வழியாக சென்றவர்கள் பார்த்து, திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சடலத்தை மீட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement