குடிபோதையில் குண்டு மிரட்டல் வாடிக்கை வாலிபருக்கு காப்பு
சேலம் : குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக கொண்ட நபரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட மர்ம நபர், 'தாம்பரம், சேலம் ரயில்வே ஸ்டேஷனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போகிறேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.சென்னை, சேலம் ரயில்வே போலீசார் விசாரித்ததில், செங்கல்பட்டு அருகே, சோலையூரை சேர்ந்த வினோத்குமார், 35, மிரட்டல் விடுத்தது தெரிந்தது. நேற்று காலை, சென்னை, கோட்டையூரில் இருந்த அவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில், மனைவியிடம் சண்டை போடும் போதெல்லாம், குடிபோதையில் மிரட்டல் விடுத்து வந்தது தெரிந்தது.ஏற்கனவே, முன்னாள் முதல்வர் பழனிசாமியின் வீட்டுக்கு, இருமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையும் ஒப்புக்கொண்டார். அதுபோல தற்போதும் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!