விஷம் கொடுத்து குழந்தை கொலை : சேலம் பெண்ணுக்கு ஆயுள் சிறை
சேலம் : சேலம் அருகே, விஷம் கொடுத்து குழந்தையை கொன்ற தாய்க்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம், இரும்பாலை, வட்டக்காட்டை சேர்ந்த, வெள்ளி பட்டறை உரிமையாளர் சந்திரசேகரன். இவரது மனைவி கோமதி, 28; இவர்களுக்கு, 3, 1 வயதில் பெண் குழந்தைகள் இருந்தனர்.ஆண் குழந்தை இல்லாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், பெற்றோர் வீட்டில் கோமதி குழந்தைகளுடன் இருந்தார்.கடந்த, 2019 மார்ச், 17ல், பூச்சிக்கொல்லி மருந்தை பெண் குழந்தைகளுக்கு கொடுத்து, அவரும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் கோமதி, 3 வயது குழந்தை உயிர் பிழைத்தனர். ஆனால், 1 வயது குழந்தை இறந்துவிட்டது. இரும்பாலை போலீசார் கோமதியை கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கோமதிக்கு ஆயுள் தண்டனை, 2,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெகநாதன் நேற்று உத்தரவிட்டார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!