போர்-பே அணையில் தமிழக பொறியாளர்கள் ஆய்வு
கூடலூர் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் வெளியேறும் 'போர்-பே' அணையில் தமிழக பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தேக்கடியில் உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நீர் 2 கிலோ மீட்டர் துாரம் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்று குமுளி மலைப் பாதை அருகே 'போர்பே' அணையில் சேரும். அங்கிருந்து தமிழகப் பகுதிக்கு மின்உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலமும், இறைச்சல் பாலம் வழியாகவும் வெளியேற்றப்படும்.
இந்த அணையில் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர், கண்காணிப்புப் பொறியாளர் சுகுமார், பெரியாறு வைகை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!