12 நாட்டு வெடிகுண்டுகள் ஸ்ரீவி., அருகே பறிமுதல் : பட்டதாரி வாலிபர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய செம்பட்டையான்காலை சேர்ந்த பட்டதாரி கார்த்திக் 24, வீட்டில் இருந்து 12 நாட்டு வெடிகுண்டுகளை கிருஷ்ணன்கோவில் போலீசார் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் அவரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே செம்பட்டையன்கால் பகுதியில் கிருஷ்ணன்கோவில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு ரோந்து சென்றனர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், காட்டு பன்றியை வேட்டையாடி அதன் கறியை சமைத்ததை கண்டறிந்தனர்.கார்த்திக்கின் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது அங்கு 12 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்தது தெரியவந்தது.கிருஷ்ணன்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். வேட்டைக்காக அவரே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது தெரியவந்தது. எஸ்.பி., மனோகரன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை நடத்தினார்.
பின் கார்த்திக்கையும், பறிமுதல் செய்யப்பட்ட 12 நாட்டு வெடிகுண்டுகளையும் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.வனஅலுவலர் கார்த்திக் விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்ட கார்த்திக் ஏற்கனவே வனவிலங்குகள் வேட்டையாடிய சம்பவத்தில் பிடிபட்டவர் என தெரியவந்தது. வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கார்த்திக் மீது 6 பிரிவுகளில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெற்று அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!