ஜூலை இறுதியில் ஆஜராக சோனியாவுக்கு உத்தரவு
புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு தொடர்பாக அடுத்த மாத இறுதியில் ஆஜராக காங். தற்காலிக தலைவர் சோனியாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா மற்றும்எம்.பி. ராகுலுக்கு அமலாக்கத் துறை 'சம்மன்' அனுப்பியது.ஐந்து முறை ஆஜரான ராகுலிடம் அமலாக்கத் துறையினர் 50 மணி நேரம் விசாரணை நடத்தினர்.சோனியாவை ஜூன் 8ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் ஜூன் 2ம் தேதி அவருக்கு கொரோனா தொற்றுஉறுதியானது.
பின் நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து சோனியா ஜூன் 12ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து ஜூன் 20ல் வீடு திரும்பினார்.இந்நிலையில் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.ஆனால் இன்னும் சில வாரங்களுக்கு தன்னை முழுமையான ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதை குறிப்பிட்ட சோனியா அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு கடிதம் எழுதினார்.
இதையடுத்து சோனியாவிடம் நடத்த வேண்டிய விசாரணையை நான்கு வாரங்களுக்கு அமலாக்கத்துறை ஒத்திவைத்தது. அடுத்த மாதம் இறுதியில் ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!