இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.70 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபத்தில் இந்திய கடலோர காவல்படை, மரைன் போலீஸ், வனத்துறையினர் கடத்தல் தடுப்புக்கான' சஜாக்' எனும் ஆப்பரேஷனில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மண்டபம் வேதாளை கடற்கரையில் உள்ள முகமதுஅலி ஜின்னா 42, என்பவரது தென்னந்தோப்பில் மண்டபம் மரைன் எஸ்.ஐ., காளிதாஸ், வனச்சரக அலுவலர் மகேந்திரன், போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு பதுக்கி வைத்திருந்த 650 கிலோ கடல் அட்டை, வேகவைக்க பயன்படுத்திய 3 அண்டா, ஜெனரேட்டரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடல் அட்டையை மருத்துவப்பயன்பாட்டிற்காக இலங்கைக்கு கள்ளப்படகில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. தலைமறைவான முகமதுஅலி ஜின்னாவை போலீசார் தேடுகின்றனர். இந்த கடல் அட்டையின் இலங்கை மதிப்பு ரூ. 70 லட்சம்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!