நிலநடுக்க மீட்பு நடவடிக்கை: திணறி தவிக்கும் ஆப்கன்

தலிபான் அரசு ஒப்புதல்
இங்கு, இறந்து போனவர்களின் உடல்களை மீட்கவும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுவோரை உடனடியாக காப்பாற்றவும் முடியாத நிலை உள்ளது. கிராம மக்கள் கைகளால் மண் குவியல்களை அகற்றி உள்ளே சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இது போன்ற நிலை வேறு நாட்டில் ஏற்பட்டிருந்தால், உலக நாடுகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பி இருக்கும்; நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருக்கும்.ஆப்கனை பயங்கரவாத குழுவான தலிபான்கள் ஆட்சி செய்வதால், பல நாடுகள் உதவி செய்ய ஆர்வமின்றி உள்ளன. தலிபான் அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்வது எந்த அளவிற்கு மக்களை சென்று சேரும் என்ற கேள்வியும், ஆர்வக் குறைவுக்கு காரணம்.அதேசமயம் தலிபான் அரசும், ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம், மீட்பு பணிக்கு வெளிப்படையாக உதவி கோராமல் உள்ளது. இருந்த போதிலும் ஐ.நா., அமைப்புகள், நிலச்சரிவு இடங்களை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்க தலிபான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிவாரண பொருட்கள்
அண்டை நாடான பாக்., எட்டு லாரிகளில் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளது. ஈரான், கத்தார் ஆகிய நாடுகளும் விமானத்தில் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளன.கடந்த ஆண்டு ஆப்கனில்ஜனநாயக முறையில் அமைந்த அரசை விரட்டி விட்டு, தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் தலிபான்கள்தலைமையிலான அரசை, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை.அதேசமயம் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு, இந்தியா மனிதநேய அடிப்படையில் உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறது.கடந்த, 2002ல் வடக்கு ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில், 4, 500 பேர் இறந்தனர். இதையடுத்து தற்போது கோஸ்ட் நகரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தான் அதிக அளவில் மனித உயிர்களை பலி வாங்கியுள்ளது.
வாசகர் கருத்து (11)
இந்து கோயில்களை இடித்து, இந்தியாவை கொள்ளையடித்து சென்ற நாட்டின் நிலைமை தமிழ் நாட்டில் இந்து கோயில்களை இடித்து கொள்ளையடித்து வளர்ந்த திராவிட கூட்டத்திற்கும் விரைவில் வரும்
,,,,
அரசாங்கம் செய்யும் தவறுக்காக அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள், மற்ற நாடுகள் முடிந்த அளவுக்கு பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.
அப்பாவி மக்களுக்கு சாப்பாடு குடுக்குறாங்கல்ல? அப்பறம் என்ன? இருந்தாலும் அவன் நாட்ல இருந்து இங்கே வந்து குண்டு வச்சுட்டு ஓடிப்போறான்ல? அதுக்கு என்ன சொல்றீரு?
உண்மை..... ஆன்னால் அதற்கு அரசு அனுமதி அளிக்கவேண்டும் (வேண்டுகோள் வைக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை) .... உதவி செய்ய வருபவரை துன்புறுத்த கூடாது (ஆடை கட்டுப்பாடுகள் மூலம்) ... எவ்வளவுக்கெவ்வளவு அரசு உதவி செய்ய வருபவர்களை கண்ணியமாக நடத்துகிறதொ, அவ்வளவு உதவிகள் வந்து சேரும்
யார் சொன்னது? ஆப்கனுக்கு கேட்க ஆள் இல்லை, "அவர்களுக்கு" உதவி செய்ய எவரும் இல்லை என்று? எங்கள் விடியல் தளபதி அப்படி விடமாட்டார்.உதய் அண்ணாவை அனுப்பி தீர்ப்பார் . இல்லையா , எங்கண்ணன் மாவீரன் நெய்தல் படை கூட அனுப்பப்படும் .
நம்ம சீமான், அமீர் எல்லாம் சேவை செய்யப் போகலாம்.