உ.பி.,யில் வேன் மரத்தில் மோதி 10 பேர் பலி
லக்னோ : உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 யாத்ரீகர்கள் உத்தரகண்டின் ஹரித்வார் சென்று விட்டு நேற்று உபி.,யின் லக்கிம்பூர் திரும்பினர். அப்போது பிலிபட் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மரத்தில் மோதி 10 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:
ஹரித்வாரில் இருந்து 17 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் நேற்று காலை கஜ்ரௌலா பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் 10 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். ஏழு பேர் காயமடைந்தனர் என்றனர்.காயமடைந்த பயணிகள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் பலியானவர்கள் இதுவரை அடையாளம் காணவில்லை எனவும், தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!