Load Image
dinamalar telegram
Advertisement

மதுரையில் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் தலைமையில் ரயில்வே ஸ்டேஷனில் அத்துமீறல்

Tamil News
ADVERTISEMENT
மதுரை: மதுரையில் நேற்று ரயில் நிலைய முற்றுகையை தடுத்த போலீஸ்காரர் மாரிராஜ் கன்னத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அறைந்தார். ஸ்டேஷன் வளாகத்திற்குள் நுழைய முயன்ற கட்சியினரை தடுத்த போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

ராணுவத்தின் அக்னிபத் திட்டம், மதுரை - வாரணாசி இடையே தனியார் ரயில் இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் எம்.பி., வெங்கடேசன் தலைமையில் ரயில் மறியலுக்கு வந்தனர்.மெயின் ரோட்டிலேயே அவர்களை போலீசார் தடுத்தனர். வெங்கடேசன் முதல் ஆளாக நின்றிருந்ததால் அவரை பின்னோக்கி தள்ள போலீசார் தயங்கினர்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கட்சியினர் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு, ஸ்டேஷனிற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் மாரிராஜ் கன்னத்தில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அறைந்தார். இதுவே சாதாரண பொதுமக்களாக இருந்தால் போலீசாரின் நடவடிக்கை கடுமையாக இருந்திருக்கும். ஆனால் கம்யூ., கட்சியினர் என்பதாலும், தி.மு.க., கூட்டணியில் இருப்பதாலும், மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாலும் போலீசார் மென்மையான போக்கையே கையாண்டனர்.Latest Tamil News
போலீஸ் தடையை மீறி ஸ்டேஷன் பிரதான வாசலில் கட்சியினர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் திடீரென கட்சி கொடியுடன் மறியலில் ஈடுபட ரயில்களை நோக்கி ஓடினர். அவர்களை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தடுக்க, அவருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். கட்சி கொடியை பறித்துச்சென்ற கமிஷனரை விரட்டிச்சென்று பறிக்க முயன்றனர்.

மக்களுக்காக போராடுவதாக கூறும் கம்யூ., கட்சியினரின் இந்த போராட்டத்தால் நேற்று ரயில்வே ஸ்டேஷனிற்கு வந்த பயணிகள் ஸ்டேஷனிற்குள் செல்ல முடியாமல் தவித்தனர். மறியலுக்கு முயன்றதாக எம்.பி., 50 பெண்கள் உட்பட 350 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது, அத்துமீறியது என ராஜேந்திரன் மீது திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (29)

 • jayvee - chennai,இந்தியா

  மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் மோகன் அவர்கள் இருந்த இடத்தில இப்போது வெங்கடேசன்.. அசிங்கம்

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  சிவப்பு கொடி ஏந்தி அரசியல் செய்யும் சீனாவிலும் ரஷ்யாவிலும் நன்றாக உழைத்தால்தான் சம்பளம் - வாழ முடியும். உழைக்காமல் போராட்டம் செய்ய முடியாது. கம்யூனிச நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்தால் ஒன்று கைது இல்லையேல் மரண தண்டனைதான். இந்தியாவில மட்டும்தான் இந்த கம்முனிசம் ஆட்டம் பாதாம் எல்லாம்.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  அடுத்த நாட்டு ஏவள்ளைதான் இந்த குரூப் ..நாட்டை நாசமாக்குவதற்கு கூலி பெற்று பொது சொத்துக்களை சேதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் ..போலீஸ் துறையினர் மென்மையாக நடந்து கொள்வதால் வந்த வினை ..தன வீட்டு பொருட்களை சேத படுத்தினால் இப்படி இருப்பார்களா காவலர்கள் ...தேசத்தின் சொத்து மக்களின் வரி பணம் .. இந்து எம்பீ சு பதவியை பறித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் ..இந்து தெய்வங்களின் எதிராக நடந்த பேரணிக்கு துணை போன ஆள் தான் இவர் இந்து எதிரிகளுக்கு ஸலாம் போடும் பிறவி தான் இவர்

 • RAMESH - chennai,இந்தியா

  தம்படிக்கு பிரயோசனம் இல்லாத கட்சி. அடுத்த வேலை சோத்துக்கே சிங்கி . இதுல ரயில் மறியல் வேறு. இவங்க திமுக கூட்டணி கட்சி என்பதால போலீஸ் மென்மையான முறையை கையாண்டார்கள். கேவலமா இல்ல. ஒருத்தன் போலீஸ் கன்னத்துல அறஞ்சிருக்கான் . அப்புறம் என்ன மென்மை , மேன்மை சொல்லிக்கிட்டு . கலவரம் செஞ்சவங்கள போட்டு மிதிக்க வேண்டியது தானே . அரெஸ்ட் பண்ணி டி காபி கொடுத்து வீட்ல பத்திரமா இறக்கிவிடுவாங்க .

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  //"ஆயுதப்படை போலீஸ்காரர் மாரிராஜ் கன்னத்தில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அறைந்தார்"// பதில் தாக்குதல் இல்லை எனும்போதே தெரிகிறது. இது தோழமை சுட்டுதல் கணக்கில் வரும். இரு தரப்பும் த்ராவிஷ அல்லக்கைகள் என்பதால் மான அவமானங்களுக்கு இடமில்லை.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்