3 பாக்., படகுகள் குஜராத்தில் பறிமுதல்
ஆமதாபாத்: குஜராத்தின் கட்ச் கடற்பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த பாகிஸ்தானை சேர்ந்த மூன்று படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் கடல் எல்லையின் இந்திய பகுதிக்குள் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் மூன்று படகுகள் சுற்றி திரிவதை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர்.உடனடியாக அப்பகுதிக்கு சென்று மூன்று படகுகளையும் கைப்பற்றினர்.
ஆனால் படகுகளில் யாரும் இல்லை. விசாரணையில் அந்தப் படகுகள் பாகிஸ்தானை சேர்ந்தவை என தெரிய வந்தது. படகில் வந்தது பாகிஸ்தான் மீனவர்களா அல்லது பயங்கரவாதிகளா என எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!