ADVERTISEMENT
புதுடில்லி: ''பிரிக்ஸ் அமைப்பை சர்வதேச அமைப்பாக வலுப்படுத்த வேண்டும்'' என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
'பிரிக்ஸ்' அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் 14வது மாநாடு சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தலைமையில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று துவங்கியது. சீன அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
பிரிக்ஸ் மாநாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடத்தப் படுகிறது. கொரோனா பரவலின் தீவிரம் குறைந்துஇருந்தாலும் அதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை. கொரோனா தொற்றால் பல நாடுகளும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. பொருளாதார சரிவிலிருந்துமீள பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பிரிக்ஸ் சார்பில் துவக்கப்பட்டுள்ள வளர்ச்சி வங்கியில் சேரும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பிரிக்ஸ் அமைப்பை வெறும் பேச்சு நடத்தும் அமைப்பாக இல்லாமல் சர்வதேச அமைப்பாக மாற்ற வேண்டும்.பிரிக்ஸ் இளைஞர்கள் மாநாடு பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகளை நாம் நடத்த வேண்டும்.
இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் யோசனைகள் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மாநாட்டில் சீன அதிபர் ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரும் பேசினர். மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.

....