தனியார் பள்ளியில் சேர்ந்த டாப்பர்ஸ் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்க உத்தரவு
சென்னை: அரசின் சார்பில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 'டாப்பர்ஸ்' மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி இளநிலை பட்டப் படிப்பு இன்ஜினியரிங் மருத்துவம் உட்பட அனைத்து வகை உயர் கல்வியிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் தமிழக அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகுப்பில் விடுபட்டிருந்தாலும் இட ஒதுக்கீடு கிடைக்காது.
இந்த கட்டுப்பாடுகளில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் தனியாக தேர்வு செய்யப்பட்டு சில முன்னணி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பிளஸ் 1 பிளஸ் 2 படித்துஉள்ளனர்.
இந்த மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர கட்டணங்களை பள்ளிக்கல்வி துறையே நேரடியாக பள்ளிகளுக்கு செலுத்துகிறது.இந்த மாணவர்களுக்கும் உயர்கல்வி படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக இன்ஜினியரிங்கவுன்சிலிங்கின் ஆன்லைன் விண்ணப்பத்தில் தனியார் பள்ளிகளில் அரசின்கல்வி உரிமை சட்டத்தில் படித்தவரா என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட 'டாப்பர்ஸ்' மாணவர்கள் இன்ஜினியரிங் விண்ணப்பத்தில் தங்கள் விபரத்தை வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!