Load Image
dinamalar telegram
Advertisement

எட்டிமடையில் மக்கள் தொடர்பு முகாம்


கோவை : எட்டிமடை கிராமத்தில் வரும், 29ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.கோவை, மதுக்கரை வட்டம், திருமலையாம்பாளையம் உள்வட்டம், எட்டிமடை கிராமத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் தலைமையில் வரும், 29ம் தேதி காலை, 10:00மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.


எட்டிமடை பிரிவில் உள்ள கே.கே.மஹாலில் இந்த முகாம் நடக்க உள்ளது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் கோவை(தெற்கு) தலைமையில், எட்டிமடை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து, மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement