விளையாட்டு விடுதியில் சேர இரண்டாம் கட்ட கவுன்சிலிங்
கோவை : விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு விடுதிகள் நடத்தப்படுகிறது. சர்வதேச விளையாட்டு வீரர்கள், நிபுணர்கள் அடங்கிய குழு மூலம், தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கபடி, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் திறைமையுள்ள மாணவ, மாணவியரை தேர்வு செய்து, சத்தான உணவு, தங்கும் வசதி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, ஆண்டுதோறும் மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான கவுன்சிலிங், சென்னையில் நடைபெறும். இந்தாண்டு, மாநில அளவிலான கவுன்சிலிங் 'வீடியோகால்' வாயிலாக கோவை நேரு ஸ்டேடியத்தில், கடந்த 10ம் தேதி நடந்தது.அதில் விடுபட்டவர்கள், கவுன்சிலிங் வர தவறியவர்கள் மற்றும் விடுதி மாற்றுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் முன்னிலையில் நேற்று நடந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!