மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம்
திருப்பூர், : தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் விருதுநகர் முதல் காவுதம்பாளையம் வரை உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.காங்கயம் அருகே, பாப்பாங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது விவசாய நிலத்தில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக நேற்று காலை, 11:00 மணி அளவில், அதிகாரிகள் நில அளவை செய்ய வந்தனர்.விவசாயி தங்கவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், நில அளவீடு செய்யும் பணியை நிறுத்த வேண்டும்;
இதுகுறித்து எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கயம் வருவாய் துணை தாசில்தார் மயில்சாமி, டி.எஸ்.பி., முத்துக்குமரன், படியூர் வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை; விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.மதியம், 1:30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, காங்கயம் போலீசார் கைது செய்தனர்; சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து, விடுவித்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!