கழிவுநீரை தடுத்த பின் குளத்தில் படகு சவாரி; குறைதீர் கூட்டத்தில் யோசனை
திருப்பூர், : திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க முன்னாள் தலைவர் பொன்னுசாமி பேசியதாவது:நுாறு நாள் வேலை திட்டத்தில், விவசாய பணிகளும் நடைபெற்றுவருகின்றன. மாநகர பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில், தோட்டக்கலை துறையில் இந்த ஆண்டு, குறிப்பிட்ட கிராமங்களுக்கு மட்டும் 80 சதவீதம் நிதி செலுத்தப்பட உள்ளது.
இதனால் மற்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் பயனடைய முடியாத நிலை உருவாகிறது.திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இயங்கும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலக கட்டடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. மழை காலங்களில் நீர் கசிவு ஏற்படுகிறது. குறுகிய இடத்தில் இயங்குவதால், இவ் அலுவலகங்களில் விவசாய இடுபொருட்களை வைக்க முடிவதில்லை. திருப்பூர் வட்டார வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களுக்கு இடம் தேர்வு செய்து, புதிய கட்டடம் கட்டவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் அளித்த மனு:ஆண்டிபாளையம் குளம் அருகே உள்ள சிறுவர் பூங்கா பழுதடைந்துள்ளது. இதை புதுப்பிக்கவும், குளத்தில் படகு சவாரி, சிறுவர்களுக்கு நீர் விளையாட்டு, பார்வையாளர் மாடம் அமைக்க தமிழக அரசு, ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.மங்கலம், சுல்தான்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் சாக்கடை கழிவுநீர், ராஜவாய்க்கால் வழியாக ஆண்டிபாளையம் குளத்தில் கலந்துவருகிறது.
அதனால், குளத்து நீர் மாசு அடைகிறது. குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்; அதன்பின், படகு சவாரி துவக்கவேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் நேரில் சென்று குளத்தில் ஆய்வு நடத்தி, மாசுபாடுகளை தடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!