ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மாணவர்கள் கலக்கல் சாதனை
திருப்பூர், : திருப்பூர், திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவர் ஹரீஷ், பிளஸ் 2 தேர்வில் 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். மாணவி புவனா - 595 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி அங்கையற்கன்னி- 594 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.
பள்ளியில் தேர்வு எழுதிய, 66 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சதமடித்துள்ளனர்.பத்தாம் வகுப்பில், மாணவி நக்சத்ரா, மாணவர் தனுஜ் இமயவரம்பன் ஆகியோர், தலா 491 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.மாணவி ரித்திகா - 489 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில், சாதித்த மாணவ, மாணவியரை, ஏ.வி.பி., பள்ளி தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!