Load Image
dinamalar telegram
Advertisement

கொரோனா வார்டு இடமாற்றம்

திருப்பூர் : திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையை விரிவுபடுத்தி, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக கட்டும் பணி நடந்து வருகிறது. 350 கோடி ரூபாயில், ஆறுதளங்களுடன் நடக்கும் பணி செப்., முதல் வாரம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது, 80 சதவீத பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்டமாக மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நுழைவு வாயில், சுற்று வட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, மூன்று ஆண்டுகளாக கொரோனா வார்டாக செயல்பட்ட, சிறப்பு பிரிவு பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.கொரோனா பரிசோதனை அறை, படுக்கைகள், ஆக்சிஜன் வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அருகே உள்ள 'தீனதயாள் உபாத்யாத்' சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்தளத்தில், 30 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கொரோனா வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement