பிளாட்டோஸ் அகாடமி பள்ளி பிளஸ் 2 தேர்ச்சியில் அசத்தல்
திருப்பூர் : திருப்பூர், சின்னாண்டிபாளையத்தில் உள்ள பிளாட்டோஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 தேர்வில், மாணவி வினோதினி, 590 மதிப்பெண் பெற்று முதலிடம். மாணவர்கள் மதன், முகமது அப்தல் ஆகியோர் தலா, 585 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம். விக்ரமன், 581 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம்.மாணவர் மதன் பொறியியல் 'கட்ஆப்' மதிப்பெண்ணாக, 199.5 எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
மாணவர்கள் பலர் உயிரியல், கணிதம், வர்த்தகம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் 'சென்டம்' அடித்துள்ளனர்.இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், மாணவி, சுப கனிஷ்கா, 478 மதிப்பெண் பெற்று முதலிடம். விஷ்ருதா, ஹர்ஷினி ஆகியோர், தலா, 477 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம். நிவாஷினி, 475 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம். பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்ல்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!